×

சென்னை – பெங்களூரு ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதால் பயண நேரம் வெகுவாக குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்களை 200 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கு தற்போதுள்ள தண்டவாள கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை உயர்த்துவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மார்ச்சில் தயாராகிவிடும்.

விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பிறகு தண்டவாள கட்டமைப்பை மேம்படுத்தி ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் புதிய ரயில் பாதை அமைத்து அதிவேக ரயில்கள் இயக்க ஏற்கனவே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்த நீண்டகாலம் ஆகும் என்பதால் தற்போதைய கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டம் அமலாகும் முன் தற்போதுள்ள ரயில் கட்டமைப்பை மேம்படுத்தி ரயில்களை அதிவேகமாக இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னை – பெங்களூரு ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம்: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Bangalore ,Mysore Road ,
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...